ஒரு டென்னிஸ் பந்து அளவிற்கு பெரிதான, வெட்டப்படாத முழுமையான வைரம் 53 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்துள்ளது. இதன் எடை 1,109 காரட். ஏலத்தில் இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் 53 மில்லியன் டாலரில் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி எடுக்கப்பட்டது என்றும், 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லாரன்ஸ் கிராஃப் கூறியுள்ளார் . இதற்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று பெயரிட்டுள்ளனர். பழமையான இந்த வைரத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் மட்டுமே வெட்டி பட்டை தீட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.