முதலீட்டு உலகின் முடிசூடா மன்னன்! வாரன் பஃபெட் தொட்டதெல்லாம் பொன்னானது எப்படி?

முதலீட்டு உலகின் முடிசூடா மன்னன்! வாரன் பஃபெட் தொட்டதெல்லாம் பொன்னானது எப்படி?
முதலீட்டு உலகின் முடிசூடா மன்னன்! வாரன் பஃபெட் தொட்டதெல்லாம் பொன்னானது எப்படி?
Published on

வாரன் பஃபெட்....இன்றைய தேதியில் உலகின் 7ஆவது பெரிய பணக்காரர் இவர்தான். சொத்து மதிப்பு சுமார் 8 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்.

தொழிலில் யார் ஜெயிப்பார்கள்..? எந்த நிறுவனம் ஜெயிக்கும் என்பதை துல்லியமாக கணித்து அதில் தனது பணத்தை முதலீடு செய்யும் வித்தையில் சிறந்தவர் வாரன் பஃபெட். தொழில் உலகில் ஜெயிக்கும் குதிரையை அடையாளம் காணத் தெரிந்த திறமையே வாரன் பஃபெட்டை உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக்கியது.



1930இல் அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் (NEBRASCA) பிறந்த வாரன் பஃபெட் மூளையை முதலாகக் கொண்டு செய்த முதலீடுகள் கோடிகளை கொட்டத் தொடங்கின. தொட்டதெல்லாம் பொன்னானது. உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக உருவெடுத்த வாரன் பஃபெட் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

பஃபெட் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெறுமளவுக்கு உயர்ந்ததை பங்கு முதலீட்டு உலகமே வியந்து நோக்கியது. ஆனால் வெற்றிக்கான அந்த ரகசியத்தை பஃபெட் தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. எதிலுமே அவசரப்படக் கூடாது... நீண்ட கால நோக்கில் முதலீடுகள் தேவை.. எல்லாரும் போகிறார்கள் என்பதற்காக நீயும் அந்த பாதையில் போகாதே.... உனக்கு எது சரியாக தெரிகிறதோ அதை மட்டும் செய் என பல்வேறு ஆலோசனைகளை தனக்கு பின்வரும் சந்ததியினருக்கு தெரிவித்தார் பஃபெட்.

பங்குச்சந்தையில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை சமூக சேவைக்கே செலவழித்துவிட்டார் பஃபெட். இதுவரை அவர் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சமூக சேவைக்கே கொடுத்து விட்டார். இதோடு நிற்காமல் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்சுடன் சேர்ந்து THE GIVING PLEDGE என்ற அமைப்பை தொடங்கியுள்ளார் பஃபெட்.

உலகெங்கும் உள்ள கோடீஸ்வரர்களை தங்களுடன் இணைய வைத்து அவர்கள் சொத்துகளில் பாதியை சமூக நலனுக்கு அளிக்க வைப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். THE GIVING PLEDGE அமைப்பில் 28 நாடுகளை சேர்ந்த 236 கோடீஸ்வரர்கள் இணைந்து தங்கள் சொத்துகளில் பாதியை சமூக நலனுக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.

இத்திட்டத்தில் தனது 10 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளையும் சாமானியர்கள் நலனுக்கு செலவழிக்க அளித்துள்ளார் பஃபெட். கோடிகளை சம்பாதிப்பது
எப்படி..? அதை அனைவருக்கும் பயன்படும் படி செலவழிப்பது எப்படி என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்த வாரன் பஃபெட்டுக்கு இன்று 92ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Happy Birthday Warren Buffett!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com