ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம் என இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு யார்ஷயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் 24 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த நபர் கடந்த ஆண்டு திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளர் தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். தனது நிறுவனத்தின் உயர் அதிகாரி, தனது வழுக்கையை கேலி செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணியிடங்களில் பெண்களின் உடல் பாகங்களை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதைப் போல், ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்துக்குள் அடக்கும் எனத் தெரிவித்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட நபருக்கு நிறுவனத்தின் சார்பில் இழப்பீடு வழங்கவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிக்கலாம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! - மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்