கரீபியன் தீவின் செயின்ட் மார்டினில் இர்மா புயல் ஓய்ந்ததை அடுத்து, மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக சிக்கி தவித்து வந்த சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த நாடுகளுக்கு அவசர, அவசரமாக திரும்ப தொடங்கியுள்ளனர்.
செயின் மார்டின் தீவை இர்மா புயல் தாக்கியதில் அங்கிருந்த ஒட்டுமொத்த வீடுகளும் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது புயல் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதால், விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செயின்ட் மார்டினில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு திரும்பும் முனைப்பில் அந்த தீவின் ஜூலியானா விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அங்கிருந்த ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.