உலகம்
தண்ணீர் பற்றாக்குறையால் ஏழை நாடுகள் அதிக பாதிப்பு... ஆய்வறிக்கையில் தகவல்!
தண்ணீர் பற்றாக்குறையால் ஏழை நாடுகள் அதிகம் பாதிப்பிற்குள்ளாவவதாக அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் உலக உணவு உற்பத்தி ஏழை நாடுகளைத் தான் அதிகம் பாதிப்பதாக சர்வதேச அறிக்கை கூறியுள்ளது. உலகளவிலான ஜிடிபியில் 8 சதவீதம் இழப்பு 2050இல் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படுமென்றும் அவதானித்துள்ளது.
அடிப்படை வாழ்வாதாரமான தண்ணீர் பற்றாக்குறையால் உணவுப் பாதுகாப்பும் மனித வளர்ச்சியும் அபாயமான நிலையில் உள்ளதாக பருவநிலை தாக்க ஆய்வுக்கான போட்ஸ்டாம் கல்வி நிலையத்தின் இயக்குனர் ஜோகன் ராக்ஸ்ட்ராம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தண்ணீர் சுழற்சி சமநிலையற்ற நிலைக்குச் செல்வதை மனித வரலாற்றில் முதல் முறையாக நாம் அனுபவிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். நீர்வளத்துக்கு ஆதாரமான சூழலைப் பாதுகாப்பதற்குத் தவறிவிட்டோம் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.