லெபனானை பூர்விகமாக கொண்ட மியா கலிஃபா, கடந்த 2001ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையினரின் திடீர் தாக்குதலுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.
இதனால் அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் செயல்படும் பிளே பாய் நிறுவனம், மியா கலிஃபாவுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கனடாவில் உள்ள நிறுவனமும் அவருடனான ஒப்பந்ததை திரும்ப பெற்றுக்கொண்டது.
இது குறித்து அவர் கூறுகையில், ”பாலஸ்தீன மக்களின் சூழ்நிலையை பார்த்தும் அவர்கள் பக்கம் நிற்கவில்லை என்றால் நீங்கள்தான் தவறான பக்கம் நிற்கிறீர்கள் என அர்த்தம். ஹமாஸ் குழுவினர்கள் போராளிகள். நிறுவனங்கள் ஒப்பந்தங்களை திரும்பபெற்று வணிக ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டாலும், பாலஸ்தீனத்துக்கு தொடர்ந்து தமது ஆதரவு உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.