மியான்மரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ், ரோஹிங்ய இஸ்லாமியர் விவகாரத்தை எழுப்பாதது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரின் தலைமை ஆட்சியாளர் ஆங் சான் சூச்சியுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போப் ஆண்டவர், அனைத்து இனங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் வெளிப்படையாக ரோஹிங்யா இஸ்லாமியர் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
ரோஹிங்யா என்ற சொல்லை மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதில்லை. அதை ஏற்கும் வகையிலேயே போப் ஆண்டவரும் நடந்து கொண்டிருப்பதாக அதிருப்தி எழுந்திருக்கிறது.
இதற்கு முன் பல முறை ரோஹிங்யா என்ற சொல்லை போப் ஆண்டவர் பல முறை பயன்படுத்தியிருப்பதையும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆங்சான் சூச்சி பேசும்போதும், மியான்மர் இஸ்லாமியர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.