ரம்ஜான் நோன்பு துவங்க இருக்கும் நிலையில் அத்தியாவசியமான பொருட்கள் கிடைக்காமல் பாலஸ்தீன மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் வலுப்பெற்று வருகிறது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், காஸா சுற்றுவட்டாரப்பகுதிகளில் எப்பொழுதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வீடு உட்பட பல்வேறு பொருட்களை பறிகொடுத்த மக்கள் சாலையில் நிர்கதியாக நிற்கின்றனர். பலர் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து தற்காலமாக தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் ரம்ஜான் நோன்பு தொடங்க இருக்கின்ற நிலையில் ஒரு பொருட்களும் கிடைக்கவில்லை என்று கண்ணீர் வடிக்கின்றனர்.