அட்லாண்டிக் கடலில் உருவாகி இருக்கும் மரியா புயல் அதி தீவிரமடைந்து கரீபியன் மற்றும் லீவர்டு தீவுகளை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இர்மா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதிதாக மற்றொரு புயல் உருவாகி அதே பாதையில் முன்னேறி வருகிறது. மரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து லீவா்டு தீவுகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயலின் தாக்குதலை சமாளிக்க தயார் நிலையிலிருக்குமாறு பேரிடர் மீட்பு குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.