துருக்கியின் மேற்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், சுமார் 91 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளிலிருந்து மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரோடு மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
உற்றார் உறவினரின் இறப்பு சம்பவங்கள் அந்த பகுதியில் மரண பலத்தை ஏற்படுத்திய நிலையில் சுமார் 3 நாட்களுக்கு பிறகு அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
அது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்கள் மற்றும் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் அந்த சிறுமியை அதிசயம் என சமூக வலைத்தளங்களில் டேக் செய்து வந்த நிலையில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் அந்த அதிசயத்தின் பெயர் ‘அய்டா’ என தெரிவித்தார்.
“நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம். இளைப்பாற அமர்ந்திருந்த போது தான் ஒரு சிறுமியின் அழுகுரல் எங்கள் காதுகளில் கேட்டது. உடனடியாக அந்த குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் இருவரும் நகர்ந்தோம். ஒரு சமயலறையில் கை மட்டும் தெரிந்தது. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றிய போது குழந்தையின் முகத்தை கண்டோம். உடனடியாக ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவளை மீட்டோம்” என சொல்கின்றனர் சிறுமியை மீட்ட இப்ராஹிம் மற்றும் அஹமத்.