ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு மெசாவா சோயுஸ் என்ற ரஷ்ய விண்கலம் மூலம் கடந்த 8ஆம் தேதி விண்வெளி சுற்றுலா சென்றார். 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த பிறகு அதே விண்கலம் மூலம் கஸகஸ்தான் நாட்டிலுள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் யுசாகு மெசாவா பாதுகாப்பாக தரையிறங்கினார்.
விண்கலத்தில் இருந்து பிரிந்த பாராசூட் மூலம் அவர் தரையிறங்கினார். 46 வயதான ஜப்பானிய கோடீஸ்வரருடன் அவரது உதவியாளர் யோசோ ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற ரஷ்ய விண்வெளி வீரரும் பூமிக்கு திரும்பினர். விண்வெளிக்கு 12 ஆண்டுகளுக்கு பின் சொந்தச் செலவில் சென்ற முதல் நபர் என்ற பெருமையும் யுசாகு மெசாவா பெறுகிறார்.