தகர்க்கப்பட்ட சிலைகள்
தகர்க்கப்பட்ட சிலைகள்pt web

சதாம் உசேன் முதல் ஜோசப் ஸ்டாலின் வரை... உலகில் தலைவர்களின் சிலைகள் தகர்க்கப்பட்ட வரலாறு!

வங்கதேச கிளர்ச்சியின் தீவிரத்தை காட்ட, அந்நாட்டின் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமானின் பிரம்மாண்ட சிலை தகர்ப்புக் காட்சியே சாட்சியாக இருக்கிறது. வரலாற்றில் இதுபோல உலகத் தலைவர்களின் சிலைகள் தகர்க்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. அவற்றை இங்கே நினைவுகூறுவோம்...

1. சதாம் உசேன்

25 ஆண்டுகள் வரை ஈராக்கை ஆட்சி புரிந்த சதாம் உசேன், தனது 65 ஆவது பிறந்த நாளுக்காக, தலைநகர் பாக்தாத்தில், பிரித்தவ் சதுக்கத்தில் 39 அடி உயர சிலையை நிறுவியிருந்தார். 2003 ல் பேராபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை சதாம் பதுக்கியிருப்பதாகக் குற்றம்சாட்டி, ஈராக் மீது குண்டுமழை பொழிந்தது அமெரிக்கா. அப்போது தப்பியோடிய சதாம், டிசம்பர் 14 ஆம் தேதி பிடிபட்டார். 20 நாள்களில் தலைநகர் பாக்தாத் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு பிரித்தவ் சதுக்கத்தில் இருந்த சதாமின் சிலையை, தங்களது எம்.88 ரக ராணுவ வாகனத்தின் மூலம் தகர்த்தது.

2. மா சே துங்

இந்தப் பட்டியலில், சீனாவின் வரலாற்றை மாற்றிப் போட்ட மா சே துங்- கும் இடம்பெறுகிறார். சீனாவை பல நூறு ஆண்டுகளாக ஆண்ட மன்னர் பரம்பரையை, சன் யாட் சென் தலைமையிலான புரட்சியாளர்கள், விரட்டியடித்தனர். அந்தக் கட்சியில் இணைந்து பணியாற்றிய மா சே துங், நூலக ஊழியராக இருந்தார். ரஷ்யப்புரட்சி பற்றிய நூல்களால் ஈர்க்கப்பட்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். சன் யாட் சென்னுக்கு பின் ஆட்சியமைத்த சியாங் காய் ஷேரின் ஆட்சிக்கு எதிராக, விவசாயிகளையும் தொழிலாளர் வர்க்கத்தையும் திரட்டி புரட்சி செய்து, புதிய சீனாவையே உருவாக்கியவர் மா சே துங். சீனாவில் நிறுவப்பட்டிருந்த இவரது சிலைகள், கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்தபோது உடைக்கப்பட்டன.

தகர்க்கப்பட்ட சிலைகள்
பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஜப்பானிய யென் டிரேடிங் காரணமா? இரண்டுக்கு இருக்கும் தொடர்பு என்ன?

3. ஜார்ஜ் வாஷிங்டன்

அமெரிக்காவின் தந்தையாகக் கொண்டாடப்படும் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலைகளும் தகர்க்கப்பட்டுள்ளன. 17 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க ராணுவத்தில் பங்காற்றிய அவர், பிரெஞ்சுப் போர், சிவப்பிந்தியப் போரில் செயலாற்றியவர். 1775 ல் அமெரிக்கப் புரட்சி ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பங்காற்றியவர். 1783 ல் பிரிட்டனுடன் 8 ஆண்டுகள் நடந்த போரில், தன்னிகரற்ற முறையில் செயல்பட்டு வெற்றிக்கு வேர் போல திகழ்ந்தவர். அமெரிக்க அரசியலமைப்பை வகுத்த குழுவில் இடம்பெற்றவர்.

4. ஹோ சி மின்

1890 களில் வியட்நாமை ஆதிக்கம் செலுத்தியது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். பிரெஞ்சுக் கப்பலில் சமையல்காரராக இருந்தபோது ஹோ சி மின், மாஸ்கோ உள்ளிட்ட உலகின் பிற நாடுகளுக்குச் சென்றபோது, லெனினிசம் குறித்து கற்றறிந்தார். 1930 - 1940 களில் சீனாவில் வெடித்த புரட்சியில் பங்கேற்றார் ஹோ சி மின். அந்தப் புரட்சியை வியட்நாமிலும் வெடிக்க வைத்து, தாய்நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தவர். ஹோ சி மினுக்கு நிறுவப்பட்டிருந்த சிலைகள், வியட்நாம் போரின்போது, அமெரிக்கப் படைகளால் தகர்க்கப்பட்டன.

தகர்க்கப்பட்ட சிலைகள்
‘எதுவா இருந்தாலும் என்னை தாண்டித்தான்..’ அசராத காப்பான்.. ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் கதை!

5. செசில் ரோட்ஸ்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய தென் ஆப்பிரிக்க தலைவர் செசில் ரோட்ஸ். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரியாக இருந்த செசில் ரோட்ஸ், வெள்ளை மற்றும் கருப்பின மக்களுக்கான சம உரிமைக்கான குரலை ஓங்கி ஒலித்தவர்.. பிரதமராகவும் இருந்தவர். நிறவெறிக்கு எதிரான போராட்டங்களின் சின்னமாகவே கருதப்படும் செசில் ரோட்ஸின் சிலைகள், பின்னாட்களில் நிறவெறிப் போராட்டங்களின்போது தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டன.

தகர்க்கப்பட்ட சிலைகள்
மாணவர் புரட்சியால் நாட்டைவிட்டே வெளியேறிய ஹசீனா... மாணவர் புரட்சியை ஒருங்கிணைத்தவர் யார்?

6. ஜோசப் ஸ்டாலின்

19 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் வளர்த்து தொழிலாளர்கள் அடக்கி ஆளப்பட்டனர். அப்போது, கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களை ரஷ்யா முழுவதும் பரப்பி தொழிலாளர்களுக்கான உரிமைகளை மீட்டவர் ஜோசப் ஸ்டாலின். 1917 ல் வெடித்த அக்டோபர் புரட்சியின் விளைவாக சமதர்ம கோட்பாட்டை நிறுவியவர். ஒன்றுபட்ட சோவியத் யூனியனை உருவாக்கியவர். அவரை, உலகம் முழுவதும் தோழர் என்று கொண்டாடியவர்கள், லெனினுக்கு சிலைகளை நிறுவினர். இவை, பிற்காலத்தில் வெவ்வெறு தருணங்களில் அடித்து நொறுக்கப்பட்டன.

தகர்க்கப்பட்ட சிலைகள்
இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்.. இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்

சோவியத் யூனியனை வல்லரசாக்கி, அதன் தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தவர் ஜோசப் ஸ்டாலின். ஒருகட்டத்தில் கேள்விகேட்க முடியாத அதிகார மையத்தை முன்னிறுத்த முயன்றவர். எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கியதால், சரித்திரத்தில் சர்வாதிகாரியாக அறியப்பட்டவர். அவரது ஆட்சியின்போதே, சோவியத் யூனியன் முழுவதும் ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டன. 1953 ல் அவரது மறைவுக்குப் பிறகு, கம்யூனிசமும் தளர்ந்தது. ஸ்டாலினின் சிலைகள் ஒவ்வொன்றாக, தேடித்தேடி தகர்க்கப்பட்டன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com