"எங்கள் சமூக மக்களை காப்பாற்றி விட்டு இறந்து போவோம்".. காசா செவிலியர்கள் உறுதிமொழி - என்ன காரணம்?

நாங்கள் இறந்து போனாலும் பரவாயில்லை எங்கள் சமூக மக்களை காப்பாற்றிவிட்டு இறைந்து போகிறோம் என காசாவில் பணிபுரியும் செவிலியர்கள் கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Gaza
Gaza file image
Published on

ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கி ஒரு மாதத்தையும் கடந்துள்ளது. போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நிமிடத்திற்கு நிமிடம் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. எங்கு திரும்பினாலும் குழந்தைகளின் அழுகுரல்களும், மரண ஓலங்களும் ஒலித்து கொண்டே இருக்கிறது. காசா மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. காயமடைந்தவர்களை படுக்க வைப்பதற்கு கூட இடம் இல்லாமல் தவித்து வருவதாகா காசா மருத்துவர்கள் தெரிவவிக்கின்றனர்.

இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றது. காசா மருத்துவமனை மற்றும் அகதிகள் முகாம் என அனைத்தையும் கண்முடித்தனமாக ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வருகின்றனர்.

Gaza
14 வயது மகளை இரக்கமில்லாமல் கொலை செய்த தந்தை; மாற்று மதத்தை சேர்ந்த மாணவருடன் பழகியதால் கொடூரம்

இந்தநிலையில், காசா நிவாரண முகாமில் பணிபுரிந்து வந்த அமெரிக்க செவிலியர் ஒருவர், அங்கு பணிபுரிந்த அனுபவம் குறித்தும், அங்கு நடந்த திக் திக் நிமிடங்கள் குறித்தும் உருக்கமாகவும் பதட்டமாகவும் பகிர்ந்துள்ளார் அதில், "காசா மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எப்படியும் தாங்கள் இறந்து விடுவோம் என தெரிந்தும் அதே மருத்துவமனையில் தங்கி போரில் காயமடைந்த மக்களுக்கு இடைவிடாமல் சிகிச்சை அளித்து வருகின்றனர். நிஜமான ஹீரோ அவர்கள் தான்.

நாங்கள் சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் போதே குண்டுகள் வெடித்து கொண்டே இருக்கும், ஆனால் ஒரு செவிலியர்கள் கூட அங்கிருந்து ஓடி ஒளியவில்லை தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். போரில் காயமடைந்த குழந்தைகள் வலியால் துடித்தர். மருத்துவமனைகள் நிரம்பியதால் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் தவித்தனர் செவிலியர்கள்.

Gaza
கடிதம் எழுதிவிட்டு இளம்தாய் எடுத்த விபரீத முடிவு - வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!

50 ஆயிரம் பேர் தங்கி இருந்த முகாமில் வெறும் 4 கழிவறைகளை மட்டுமே இருந்தது. 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. காசாவை விட்டு வெளியேற உத்தரவு வந்த போது என்னுடைய நண்பர்களை நான் அழைத்தேன்.

ஆனால், "அவர்கள் கூறிய பதில் எனக்கு கண்ணீரை வர வைத்துவிட்டது. இவர்கள் என் மக்கள், எங்களுடைய உயிர், எங்களுடைய சமூகம், நாங்கள் இறந்து போனாலும் இவர்களை காப்பாற்றி விட்டு இறந்து போகிறோம்" என அந்த செவிலியர்கள் கூறியது எனக்கு கண்ணீரை வர வைத்து விட்டது கண்ணீருடன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com