வெள்ள நீரில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையின் பாதங்கள்

வெள்ள நீரில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையின் பாதங்கள்
வெள்ள நீரில் மூழ்கிய உலகின் மிகப்பெரிய புத்தர் சிலையின் பாதங்கள்
Published on

சீனாவின் தென்மேற்கு பகுதியில் பாய்ந்தோடுகின்ற யாங்சே ஆற்றில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் உலகிலேயே மிகப்பெரியதான ஜெயண்ட் புத்தர் சிலையின் பாதங்கள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

1200 ஆண்டுகளுக்கு முன்பு மலையை குடைந்து 233 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தர் சிலையை பாதுகாக்க அதிகாரிகளும், தன்னார்வலர்களும் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி வெல்ல நீரை மடைமாற்றி வருகின்றனர். இந்த சிலை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும்  உள்ளது. 

1949க்கு பிறகு முதன்முறையாக வெள்ள நீர் புத்தரின் பாதங்களை மூழ்கடித்து செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 200 பேர் வரை சீனாவில் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com