காணாமல் போன 5 அருணாச்சல் இளைஞர்கள் : நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது சீனா

காணாமல் போன 5 அருணாச்சல் இளைஞர்கள் : நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது சீனா
காணாமல் போன 5 அருணாச்சல் இளைஞர்கள் : நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கிறது சீனா
Published on

காணாமல் போன 5 அருணாச்சல பிரதேச இளைஞர்களை சீனா நாளை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது.

செப்டம்பர் 2-ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கவனக்குறைவாக சீனாவின் பக்கம் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து சீன இராணுவம் காணாமல் போன இந்தியர்கள் தங்கள் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து காணமல் போன இந்தியர்கள் சீனாவிடம் இருந்து முறைப்படி மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இருந்து காணாமல் போன ஐந்து பேரை சீனா நாளை ஒப்படைக்க உள்ளது. கிபித்து எல்லைப் பணியாளர்கள் சந்திப்பு இடத்திற்கு அருகிலுள்ள வச்சாவில் இந்த ஒப்படைப்பு நடைபெறும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த எம்பியும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், “அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை நாளை எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட இடத்தில் சீனா இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com