நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாடிட சிறுவன்.. ரஜினி பட பாணியில் தண்டனை அளித்த தந்தை!

நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாடிட சிறுவன்.. ரஜினி பட பாணியில் தண்டனை அளித்த தந்தை!
நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாடிட சிறுவன்.. ரஜினி பட பாணியில் தண்டனை அளித்த தந்தை!
Published on

நள்ளிரவில் வீடியோ கேம் பார்த்த தனது மகனுக்கு, சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் நூதன தண்டனை அளித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

வீட்டுப்பாடம் எழுதாமல் வீடியோ கேம் பார்த்த மகன்!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது 11 வயது மகனுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளித்துள்ளார். அந்தச் சிறுவன் பள்ளியில் எழுதச் சொன்ன வீட்டுப் பாடங்களை எழுதாமல் நள்ளிரவு வரை வீடியோ கேம் விளையாண்டதாகத் தெரிகிறது. இதை அந்த சிறுவனது தந்தை கண்டுபிடித்துள்ளார்.

அருணாச்சலம் பட பாணியில் தண்டனை வழங்கிய தந்தை!

வீட்டுப் பாடம் எழுதாத தனது மகனுக்கு அருணாச்சலம் படபாணியில் தண்டனை வழங்கியுள்ளார் அவனது தந்தை. அது என்ன அருணாச்சல படம் பாணியா? அருணாச்சலம் படத்தில் தந்தை ரஜினி ஒரு கதை சொல்வார். தான் சுருட்டு பிடித்ததை தனது தந்தை பார்த்துவிட்டதாகவும், அதனால் ஒரு அறை முழுவது சுருட்டு வைத்து பிடிக்க சொல்லிவிட்டு அறையின் கதையை தாளிட்டு சென்றுவிட்டதாக, விடியும் வரை அதனை புகைத்ததால் சுருட்டு வாசனையே தனக்கு திகட்டிவிட்டதாகவும் ரஜினி கூறுவார். 

அதேபாணியில், வீட்டுப் பாடம் எழுதாமல் வீடியோ கேம் விளையாடிய மகனுக்கு வீடியோ கேம் விளையாடுவதையே தண்டனையாக வழங்கியுள்ளார் அவரது தந்தை. அதாவது, தன் மகனை, நள்ளிரவு 1 மணி முதல் அடுத்த நாள் மாலை 6 மணி வரை அதாவது தொடர்ந்து 17 மணி நேரம் அந்த சிறுவனை தூங்கவிடாமல் செல்போனில் வீடியோ கேம் விளையாடும் தண்டனையை வழங்கியுள்ளார்.

சிறுவன் பல முறை எழுந்திருக்க முயற்சி செய்தும், வாந்தி வரும் வரை விளையாடு என தந்தை வலியுறுத்தியதாக சிறுவன் கணினிக் குறிப்பில் பதிவு செய்துள்ளான். மேலும் அவன், ’தன் தந்தையிடம் இனி, படுக்கைக்குச் செல்வதற்கு முன் செல்போனில் விளையாட மாட்டேன்’ என்று உறுதியளித்த பிறகே, அந்த தண்டனையை தந்தை நிறுத்தியுள்ளார்.

சோஷியல் மீடியாவில் பரவிய விநோத தண்டனை வீடியோ!

தன் மகனுக்கு கொடுத்த விநோத தண்டனையை, அந்த தந்தை செல்போனில் படம் பிடித்து டிக் டாக் செயலியிலும் வெளியிட்டுள்ளார். அதில், ”இந்த தண்டனை கடைசி முயற்சி. இந்த தண்டனையை மற்ற தந்தையர்கள் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தமாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். இவருடைய பதிவுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இது கடுமையானது என விமர்சித்து உள்ளனர்.

ஏற்கனவே நடந்த மற்றொரு சம்பவம்

முன்னதாக, கடந்த வாரம் இதேபோன்று சீனாவின் குவாங்சி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பல மணி நேரம் செல்போனில் விளையாடியுள்ளார். பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காததால், செல்போனை பறித்த தந்தை, அதை மறைத்து வைத்துள்ளார். இதனால், அத்திரமடைந்த 13 வயது சிறுவன், செல்போனை தருமாறு தந்தையிடம் பிடிவாதம் பிடித்ததோடு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டவும் செய்தார். செல்போனை தராவிட்டால் வெட்டிவிடுவேன் என அந்த சிறுவன் கூறிய காட்சி வைரலான நிலையில், தற்போது அதற்கு நேர் எதிராக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com