கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து நாடு கூறியுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டில் வசித்து வந்த 44 வயது சீனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது சீனாவுக்கு வெளியே நிகழ்ந்துள்ள முதலாவது உயிரிழப்பாகும். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால், அவர் குணமாகிவிட்டதாக தாய்லாந்து நாடு கூறியுள்ளது.
71 வயதான நோயாளி ஒருவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. படுக்கையில் இருந்த அந்த நபர், தற்போது எழுந்து உட்காரும் அளவுக்கு முன்னேறியுள்ளதாக தாய்லாந்து கூறியுள்ளது. கடுமையான காய்ச்சல் மற்றும் ஹெச்.ஐ.வி. தொற்று ஆகியவற்றை தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை இணைத்து, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு கொடுத்த நிலையில், 48 மணி நேரத்தில் குணமாகிவிட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.