தாய்லாந்து மன்னருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, அவரது நான்காவது மனைவிக்கு வழங்கப்பட்டிருந்த அரசி அந்தஸ்து மற்றும் அரண்மனை கௌரவங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் காலமானதை அடுத்து அவரது மகன் மகா வஜ்ரலங்கோன் கடந்த மே மாதம் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார். வஜ்ரலங்கோன் முடிசூட்டப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, தனது பாதுகாப்பு அதிகாரியான 40 வயது நிரம்பிய சுதீடாவை அரச முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து சுதிடா தாய்லாந்தின் அரசியானார். விமானி, செவிலி, ராணுவ தளபதி என பன்முகத்தன்மை கொண்ட சுதீடா பேராசையுடன் செயல்பட்டதாகவும், மன்னருக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி அரசி அந்தஸ்து மற்றும் அரண்மனையில் வழங்கப்படும் மரியாதைகளை மன்னர் வஜ்ரலங்கோன் திரும்பப் பெற்றுள்ளார்.