அமெரிக்காவில் 6 நிமிட இடைவெளியில் பெண் ஒருவருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடம், வெவ்வேறு மாதம், வெவ்வேறு நாட்களில் பிறந்துள்ளது பெற்றோர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலை நாடுகளில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரண விஷயம். இந்தநிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெண் ஒருவருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடம், வெவ்வேறு மாதம், வெவ்வேறு நாட்களில் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கிளிஃப் ஸ்காட் என்பவரின் மனைவியான களி ஜோ ஸ்காட்டிற்கு ஜனவரி 11-ம் தேதி தான் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை எடுக்க மருத்துவமனை திட்டமிட்டு இருந்தது. ஆனால், கடந்த 29-ம் தேதி வழக்கமான பரிசோதனைக்காக களி ஜோ ஸ்காட் மருத்துவமனைக்கு சென்றபோது, அவரது உடலின் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை அதாவது 31-ம் தேதி திடீரென கிளி ஜோ ஸ்காட்டிற்கு சி செக்ஷன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துவிட மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
அதன்படி, டிசம்பர் 31-ம் தேதி (2022) நள்ளிரவு 11.55 மணிக்கு ஆனி ஜோ ஸ்காட் என்ற பெண் குழந்தையும், 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சரியாக 12.01 (A.M.) மணிக்கு, அதாவது 6 நிமிட இடைவெளியில் எஃபி ரோஸ் ஸ்காட் என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது. வெவ்வேறு வருடத்தில் பெண் குழந்தைகள் பிறந்தது பெற்றோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து அவர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நான் மற்றும் கிளிஃப், ஆனி ஜோ மற்றும் எஃபி ரோஸ் ஸ்காட் ஆகியோரை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்! 2022 ஆம் ஆண்டு இரவு 11:55 மணிக்கு பிறந்த கடைசி குழந்தை ஆனி. பிறகு, எஃபி 2023-ல் 12:01 மணிக்கு முதலில் பிறந்தார்! அவர்கள் இருவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் 5.5 பவுண்டுகள் எடையுடன் வெளியே வந்தனர். கிளிஃப் மற்றும் நானும் இந்த சாகசத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்!” என்று தெரிவித்துள்ளனர். இந்தப் பதிவுக்கு பலரும் லைக்குகளை அளித்து வருகின்றனர்.