அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹார்வீ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹார்வீ புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பறக்கும் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹார்வீ புயல் கடந்து சென்று பல நாள்கள் ஆன பிறகும், பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது.
பல வர்த்தக நிறுவனங்களும், கல்விக்கூடங்களும் திறக்கப்படவில்லை. வழக்கத்துக்கு மாறாக சில நாள்களிலேயே சுமார் 125 சென்டிமீட்டர் மழை பெய்ததால், டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.