டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் இப்போது உலகின் முதல் பணக்காரராகி உள்ளார்.
டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு, மஸ்க்கை அமேசான்.காம் இன்க் நிறுவனத்தை விடவும் முந்திக்கொண்டு பணக்காரராக உயர்த்தியது. இந்த தகவல்கள் உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த பொறியாளரான எலோன் மஸ்கின் நிகர மதிப்பு நியூயார்க்கில் காலை 10:15 மணிக்கு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அக்டோபர் 2017 முதல் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்துவரும் பெசோஸை விட 1.5 பில்லியன் டாலர் அதிகம். டெஸ்லாவின் பங்கு விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிவேக வளர்ச்சியில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743% உயர்ந்தது.
உலகின் 500 பணக்காரர்களின் கடந்த ஆண்டு மொத்த நிகர சொத்து மதிப்பு 1.8 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த பட்டியலில் ஐந்து தனிநபர்கள் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தினை வைத்திருக்கிறார்கள், மேலும் 20 பேர் குறைந்தபட்சம் 50 பில்லியன் டாலர் மதிப்புடையவர்கள்.