ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கி இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் மஸ்க் இணைய இருக்கிறார்.
ட்விட்டர் மீது நம்பிக்கை வைத்திருப்பது மட்டுமல்லாமல் ட்விட்டர் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கூறுபவர் மஸ்க். அவர் எங்களது இயக்குநர் குழுவில் இருப்பது நிறுவனத்துக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும் என ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
இவர் 2024-ம் ஆண்டு வரை இயக்குநர் குழுவில் இருப்பார். இயக்குநர் குழுவில் இருக்கும் காலம் வரையில் மற்றும் பதவி காலம் முடிந்த 90 நாட்களுக்கு இவர் மூலமாகவோ அல்லது இவரை சேர்ந்தவர்கள் மூலமாகவோ 14.9 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்துக்கொள்ள முடியாது என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
பாரக் மற்றும் ட்விட்டர் இயக்குநர் குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக மஸ்ட் ட்வீட் செய்திருக்கிறார்.