இங்கிலாந்தில் உள்ள ட்விக்கன்ஹாம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நிக் ஜேம்ஸ். இவர் அங்குள்ள Tesco Extra சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் SE கிடைத்துள்ளது. அதை பார்த்ததும் ஆச்சரிய அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். முதலில் ஏதோ தப்பாக ஆர்டர் வந்துவிட்டது எனவே நிக் எண்ணியுள்ளார். ஆனால் அவருக்கு ஆர்டர் வந்த பையில் அவர் ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்களும் இருந்துள்ளன.
அது குறித்து ஆர்டர் கொடுத்த பிரதிநிதியிடம் விசாரித்துள்ளார் நிக். “தற்போது Tesco Extraவில் சூப்பர் சப்ஸ்டிட்யூட்ஸ் என்ற புரோமோஷன் போய் கொண்டிருப்பதாகவும். அந்த வகையில் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஆப்பிள் பழங்களுடன் ஆப்பிள் ஐ போன் கிடைத்துள்ளது” என அந்த பிரதிநிதி சொல்லியுள்ளார்.
“நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. டெஸ்கோ விற்கு பெரிய நன்றிகள். ஆப்பிள் பழம் ஆர்டர் செய்ய போய் ஆப்பிள் போனே கிடைத்தது பெரிய சர்ப்ரைஸ்” என நிக் தெரிவித்துள்ளார்.
டெஸ்கொ ஆப்பிள் மற்றும் சாம்சங் கேட்ஜெட்களை கொடுத்து ஆச்சரியப்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்த ஆச்சரியம் அதிர்ஷ்டம் மிக்க சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாம்.