போல்சனோரா குற்றச்சாட்டை தொடர்ந்து பிரேசிலில் முடக்கப்பட்ட டெலிகிராம்... மீண்டும் வந்தது!

போல்சனோரா குற்றச்சாட்டை தொடர்ந்து பிரேசிலில் முடக்கப்பட்ட டெலிகிராம்... மீண்டும் வந்தது!

போல்சனோரா குற்றச்சாட்டை தொடர்ந்து பிரேசிலில் முடக்கப்பட்ட டெலிகிராம்... மீண்டும் வந்தது!
Published on

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் போல்சனோரா வாக்கு இயந்திரம் குறித்து சமீபத்தில் டெலிகிராமில் பதிவிட்ட குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை அந்நாட்டில் ஏற்படுத்தி இருந்தது. டெலிகிராம் மூலம் பல்வேறு தவறான தகவல்கள் பரவுவதாக பிரேசில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், விதிமுறைக்கு உட்பட்டு நடப்பதாக டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவ் உறுதி அளித்ததையடுத்து, தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் போல்சனோரா பதிவிட்ட கருத்துகளும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com