சிக்னல் இல்லை.. சவூதி பாலைவனத்தில் வழிதவறிப் போன இந்திய நபர்.. நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சவூதி அரேபியாவின் ரப் அல் காலி பாலைவனத்தில் வழிதவறிச் சென்றதால், உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரப் அல் காலி பாலைவனம்
ரப் அல் காலி பாலைவனம்எக்ஸ் தளம்
Published on

தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஷேஜாத் கான். 27 வயதான இவர், சவூதி அரேபியாவின் கரீம் நகரில் வசித்து வந்தபடியே அங்குள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், தன்னுடன் பணிபுரிந்த சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் பயணித்த ஷேஜாத் கான், அங்குள்ள ரப் அல் காலி பாலைவனத்தில் வழிமாறிச் சென்றதால், உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மிக ஆபத்தான பகுதிகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் ரப் அல் காலி பாலைவனம், அதன் தெற்குப் பகுதிகளிலும் அண்டை நாடுகளிலும் 650 கிலோ மீட்டருக்குமேல் பரவிக் கிடக்கிறது. இந்தப் பாலைவனத்தில்தான் தன்னுடன் பணிபுரிந்த சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஷேஜாத் கான் பயணித்துள்ளார்.

Death
DeathFile Photo

அப்போது அவர் பயன்படுத்திய ஜிபிஎஸ் கருவியில் சிக்னல் செயலிழந்ததால், வழிதவறிச் சென்றுள்ளார். ஷேஜாத் கான் மொபைல் போன் பேட்டரியும் தீர்ந்து ஆஃப் ஆகிவிட்டது. இதனால் இருவரும் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை. அவர்களது வாகனத்தில் எரிபொருளும் தீர்ந்துபோனதால், பாலைவனத்தின் கடும் வெப்பத்தில் உணவு, தண்ணீர் இன்றி தவித்துள்ளனர்.

மேலும், அதிதீவிர வெப்பநிலையில் இருவரும் உயிர் வாழ்வதற்குப் போராடியுள்ளனர். ஆனால் உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்பட்டதால் இருவருமே இறந்துவிட்டனர். ரப் அல் காலி பாலைவன மணல் குன்றுகளில் அவர்கள் சென்ற வாகனத்தின் பக்கத்திலேயே இருவரும் சடலமாகக் கிடந்துள்ளனர். பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகு (ஆக, 22), ஷேஜாத் கான் மற்றும் அவரது நண்பரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க; சிறையில் புகைபிடிக்கும் நடிகர் தர்ஷன் போட்டோ! சிறப்பு சலுகையா? விசாரணையில் 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

ரப் அல் காலி பாலைவனம்
மதுபான கடையைத் திறக்கும் சவூதி அரேபியா... ஆனால்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com