விரைவுச் செய்திகள்: ஆப்கனில் தலிபான்கள் | அதிமுக குற்றச்சாட்டு | ஹைதி நிலநடுக்கம்

விரைவுச் செய்திகள்: ஆப்கனில் தலிபான்கள் | அதிமுக குற்றச்சாட்டு | ஹைதி நிலநடுக்கம்
விரைவுச் செய்திகள்: ஆப்கனில் தலிபான்கள் | அதிமுக குற்றச்சாட்டு | ஹைதி நிலநடுக்கம்
Published on

ஆப்கான் போர் முடிந்தது - தலிபான்கள்: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

கைவிட்ட உலக நாடுகள்- கவலையில் ஆப்கான் மக்கள்: உலக நாடுகள் கைவிட்டுவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். தலிபான்களிடம் இருந்து தப்பிக்க காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்தனர்.

தலிபான்களுடன் நாளை ரஷ்யா பேச்சுவார்த்தை: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்களுடன் நாளை ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறது. தலிபான்களின் செயல்பாட்டை பொறுத்து புதிய அரசை அங்கீகரிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என விளக்கமளித்திருக்கிறது.

தலிபான்களுடன் நட்பாக செயல்படத் தயார் - சீனா: ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்புடன் செயல்படத் தயாரென சீனா அறிவித்திருக்கிறது. தலிபான்களின் ஆட்சியை ஆப்கானிஸ்தான் அரசு என பாகிஸ்தான் அங்கீகரித்த நிலையில் சீனா இந்த முடிவை எடுத்திருக்கிறது.

ஆப்கானில் இருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல்: காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விமான நிலையத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பிற நாட்டு விமானங்களுக்கு தலிபான்கள் அனுமதி மறுத்து வருகின்றனர்.

விமானத்தில் தொங்கிச் சென்ற 3 பேர் உயிரிழப்பு: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் தொங்கிச் சென்ற பயணிகளில் மூவர் நடுவானில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி: காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தியாவிலிருந்து விமானத்தை இயக்கும் சூழல் இல்லை என ஏர் இந்தியா அறிவித்திருக்கிறது.

சிக்கியுள்ள சீக்கியர்களை மீட்க கோரிக்கை: ஆப்கானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியிருக்கிறார்.

யாரும் ரத்தம் சிந்துவதை விரும்பவில்லை - அஷ்ரப் கனி: யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்பதற்காகவே நாட்டைவிட்டு வெளியேறியதாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கமளித்திருக்கிறார். தவறினால், அரண்மனைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முற்படும் தலிபான்களுக்கு எதிராக நிற்க நேரிடும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்ட வழக்கு-இடைக்காலத்தடை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.

பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க குழு - மத்திய அரசு: பெகாசஸ் உளவு புகாரில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது. ஒட்டுக் கேட்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுப்பதாக பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு இதை தெரிவித்திருக்கிறது.

அதிமுக குற்றச்சாட்டு - முதல்வர் ஸ்டாலின் மறுப்பு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை என பேரவையில் அதிமுக குற்றச்சாட்டி இருக்கிறது. வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

கோவையில் யாத்திரை தொடங்கிய எல்.முருகன்: கோவையில் இருந்து யாத்திரை தொடங்கினார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மக்களை சந்திக்கவே இந்த பயணம் என விளக்கமளித்திருக்கிறார்.

தேர்வு நடத்துவதில் தாமதம் - போராட்டம்: புதுக்கோட்டையில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நிர்வாகப் பதவிக்கான துறைத்தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. திருச்சி சென்று தேர்வு எழுத சொன்னதால் 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவக்கல்லூரிகளில் நேரடி வகுப்புகள்: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றிட மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்: ராமேஸ்வரம் கோயிலில் 15 நாட்களுக்குப் பிறகு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கோயில் மற்றும் கடற்கரை பகுதியில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.

அடுத்த அலைக்காக காத்திருக்க வேண்டாம்: கொரோனா 3ஆவது அலை வந்தால்தான் தடுப்பூசி செலுத்துவோம் என மக்கள் காத்திருக்கக்கூடாது என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

ஹைதி - நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழப்பு: ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1300ஆக உயர்ந்திருக்கிறது. எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.

மலேசிய பிரதமர் ராஜினாமா: பதவியேற்ற ஒன்றரை ஆண்டிற்குள் மலேசிய பிரதமர் முஹைதின் யாசின் ராஜினாமா செய்தார். ஆட்சி நடத்த தேவையான பெரும்பான்மையை இழந்ததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com