இலங்கை: தமிழர்களின் வாக்குகளை கைப்பற்றி சாதித்த ஆளும்கட்சி.. சாத்தியமானது எப்படி? வைகோ கடும் கண்டனம்

நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அதிபரின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக pt web
Published on

நாடாளுமன்றத் தேர்தலிலும் சாதித்த ஆளும்கட்சி

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், தேசிய மக்கள் சக்தி, இந்தத் தேர்தல் முடிவுகளின்படி 141 இடங்களைத் தன்வசப்படுத்தியுள்ளது.

மேலும், கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மக்கள் சக்திக்கு, 29 தேசியப் பட்டியல் இடங்களில் 18 இடங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, இலங்கை நாடாளுமன்றத்தில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி, 159 இடங்களைப் பிடித்துள்ளது.

அநுர குமரா திசநாயக
அநுர குமரா திசநாயகஎக்ஸ் தளம்

அதாவது அந்தக் கட்சி தற்போது சூப்பர் மெஜாரிட்டியைப் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அதிபரின் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. கடந்த 2020இல் ராஜபக்சேவின் கட்சி, 128 இடங்களையும், தேசிய பட்டியல் மூலமாக 17 இடங்களையும் பெற்று, மொத்தம் 145 இடங்களைக் கைப்பற்றி அதிக மெஜாரிட்டியுடன் ஆட்சி புரிந்தது. இதை, தற்போதைய தேசிய மக்கள் சக்தி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக
அமைதியாக நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்! வாக்கு எண்ணிக்கையில் யார் முன்னிலை.. அடுத்து என்ன?

தமிழர்கள் பகுதிகளிலும் வெற்றியை நிலைநாட்டிய அதிபர் கட்சி!

இதுதவிர, தமிழர்கள் பகுதிகளிலும் ஆளும் கட்சிக்கு, அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. ஆம், இதுவரை நடந்த தேர்தல்களில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளை தமிழர் கட்சிகள் கைப்பற்றி வந்த நிலையில் முதன்முறையாக ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி மகா சாதனை படைத்துள்ளது. தமிழ் வேட்பாளர்களைக் காட்டிலும் அநுர குமார திசநாயக்கவுக்கு தமிழர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அந்த வகையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான யாழ்ப்பாணம், வன்னி, நுவரேலியா, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை அதிபர் கட்சிக்கு ஆதரவு பெருகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த முறை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றிய நிலையில் இந்த முறை தேசிய மக்கள் சக்தி கட்சி வசமாக்கி உள்ளது.

அநுர குமரா திசநாயகே
அநுர குமரா திசநாயகேx page

தமிழர்கள் பகுதிகளில் வெற்றி சாத்தியமானது எப்படி?

இங்கு சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. இதேபோல், வன்னி தேர்தல் முடிவுகளை பார்த்தால், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு சுமார் 40 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. நுவரெலியாவிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி 1.5 லட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மட்டகளப்பில்கூட, தேசிய மக்கள் சக்தி கட்சி 55 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று உள்ளது. அதேபோன்று, மலையக மக்கள் செறிந்து வாழும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, களுத்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் மீதான விரக்தி மற்றும் மாற்றத்தை தமிழர்கள் விரும்புவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்னர். தமிழ் அரசியல் கட்சிகள் பிரித்துப் போட்டியிட்டதும், தமிழ்க் கூட்டமைப்புகள் பிரிந்து நின்று சுயேட்சையாய் போட்டியிட்டதும் தமிழர்கள் பகுதியில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுவதற்கு வழியமைத்துக் கொடுத்துள்ளது. தமிழர்கள் பகுதியில் நிலவிய இந்த அதிருதிப்தான் தேர்தலில் எதிரொலித்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தமிழர் பகுதிகளில் அதிபர் ஆற்றிய உரையும் பயனளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:வாழைப்பழத்தைப் பார்த்தாலே பயம்.. ஊழியர்களிடம் கடும் உத்தரவு.. ஸ்வீடன் அமைச்சரின் வெளிவந்த ரகசியம்!

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக
சொல்லி அடித்த அநுர குமரா திசநாயக! இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் புதிய வரலாறு படைத்த அதிபர் கூட்டணி!

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்னையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜே.வி.பி. கட்சியினுடைய குரலாக, தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுவந்தவர்தான் இன்றைய அதிபர் அநுர குமார திசநாயகா. அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி, ஜே.வி.பி.யினுடைய மறுபதிப்பாகும். தொடக்கத்திலிருந்தே தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற கொலைவெறி நோக்கம் கொண்டவர்தான் திசநாயகா. இலங்கையில், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில், அவரது கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள். 1987இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டபோது, தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்றும், 13ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்கக்கூடாது என்றும் சிங்கள இனவெறியினுடைய கருத்தாகத் தொடர்ந்து கூறிவந்தவர் திசநாயகா.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவரும் அவர்தான். சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கியபோது, தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கக்கூடாது என்று பகிரங்கமாகக் கூச்சலிட்டவர்தான் திசநாயகா. இந்திய அரசு தொடர்ந்து சிங்கள அரசையே ஆதரித்து வந்திருக்கிற நிலையை இனிமேல் மாற்றிக்கொள்ள வேண்டும். சிங்கள ராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். சிறையில் அடைபட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழினப் படுகொலையை நடத்திய சிங்கள அரசு மீது அனைத்துலக நாடுகளின் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு முந்தைய அதிபர்கள் தமிழர்களுக்கு எதிராகக் கொடும் குற்றங்களைச் செய்திருந்தாலும், அவர்களைவிட சிங்கள வெறிபிடித்தவர்தான் இன்றைய அதிபர். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர அவர் முற்படுவார். சிங்கள அரசோடு மிகுந்த அக்கறையோடு உறவு கொண்டுள்ள இந்திய மோடி அரசு, இனிமேலாவது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்கள ஆதரவு நிலையை எடுக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com