ஈழத் தமிழரின் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமை சபையில் இதுவரை எந்தவிதப் பேச்சும் தொடங்கப்படவில்லை என தமிழர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐ.நா மனித உரிமை சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டத்தில் இலங்கை சார்பாக தமிழர் இயக்கத்தினர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கூட்டம் தொடங்கி 4 நாட்கள் ஆகியும் இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர்களின் பிரச்னை குறித்து எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை.
மாறாக சிரியா, மியான்மர், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் பிரச்னைகளே அதிகம் பேசப்பட்டுள்ளது என தமிழர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஈழப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.நா மனித உரிமை சபையில் பேச அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 8 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 2 பேருக்கு மட்டுமே விசா வழங்கியதாக தமிழர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.