பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை தங்கள் அமைப்பினர்தான் கொன்றதாக பாகிஸ்தான் தலிபான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்தவர் பெனாசிர் பூட்டோ. முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2007-ல் தேர்தல் பேரணியின் போது, தற்கொலை படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்புதான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், அவர்கள் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுக்குப் பிறகு இப்போது அந்த அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்காவுடன் இணைந்து முஜாகிதீன்களை அழிக்க பெனசிர் திட்டமிட்டதால் அவரைக் கொலை செய்ததாக அந்த அமைப்பினர் வெளியிட்ட புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.