சிரியா போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
சிரியா கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 19 நாட்களில் 931 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதியில் இருந்து மார்ச் 8ஆம் தேதி வரை நடந்த போரில் 195 குழந்தைகள் மற்றும் 125 பெண்கள் உட்பட 931 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கவுட்டாவின் சில பகுதிகளில் க்ளோரின் வாயு தாக்குதல் நடந்ததற்கான தடயம் இருப்பதாக சிவில் பாதுகாப்பு மீட்புக் குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த திங்கள் அன்று ஐ.நாவின் உதவிப் பொருட்கள் விநியோகிக்க கிழக்கு கவுட்டா பகுதியில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சில மருத்துவப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நிவாரணப் பொருட்களை கிழக்கு கவுட்டாவுக்கு முழுமையாக விநியோகிக்கும் முன்னதாகவே போர் தொடங்கியதால் உதவிப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் வெளியேற்றப்பட்டன. இதனால் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் கிழக்கு கவுட்டா மக்கள் தவித்து வருகின்றனர்.