சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி விளங்குவதாக மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட உலகளவில் பிரபலமான சர்வதேச தலைவர்கள் பட்டியலில் 76 சதவீதம் பேரின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் அதிபர் அலைன் பெர்செட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் பைடன் 40 சதவீத ஆதரவுடன்7ஆவது இடத்தில் உள்ளார்.
இதில் தென் கொரிய அதிபர் யூன் சியோக் யூல் (yoon seok youl) மற்றும் செக் குடியரசு தலைவர் பீட்ர் பாவெல் (petr pavel)
ஆகியோருக்கு குறைந்த அங்கீகாரமே கிடைத்துள்ளது.
பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.