"இஸ்ரேலுக்கான ஆதரவு குறைந்து வருகிறது.." - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலக அளவில் இஸ்ரேலுக்கான ஆதரவு குறைந்து வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - காஸா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - காஸாபுதிய தலைமுறை
Published on

வாஷிங்டன் டி.சி.யில் (WASHINGTON D.C.) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாலஸ்தீனம் மீதான தாக்குதலால் இஸ்ரேலுக்கு உலக அரங்கில் கிடைத்து வரும் ஆதரவு குறைய தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.

இது குறித்து கூறிய அவர், “ ஹமாஸ் படையினர் மீதான தாக்குதல் மட்டுமில்லாமல் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவது சர்வதேச அளவில் எச்சரிக்கை மணியாக ஒலித்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இதேநிலை நீடித்தால்
இஸ்ரேல் மிகப்பெரிய கடின நிலையை சந்திக்கும். அமெரிக்க
பாதுகாப்பு ஆலோகரான ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று
பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - காஸா
பாகிஸ்தான்: வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தின்மூலம் காவல் நிலையத்தை தகர்த்த பயங்கரவாதிகள்?

காஸா பகுதியில் ஹமாஸ் படையினர் மீதான தாக்குதலை மீண்டும் இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது. இதுவரை காஸாவில் மட்டும் 18,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com