ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அட்லஸ் வி ராக்கெட் மூலம் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில் சக நாசா விண்வெளி வீரரும், அமெரிக்க கடற்படை முன்னாள் கேப்டன் புட்ச் வில்மோருடன் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு புறப்பட்டார்.
25 மணி நேர பயணத்திற்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.
அங்கு அவருக்கு சக விஞ்ஞானிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கும் விஞ்ஞானிகளுடன் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் உரையாடும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
ஒருவாரம் அங்கு தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட பின், வரும் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என நாசா விண்வெளி
ஆய்வு மையம் கூறியுள்ளது.