SUnitha WIlliams
SUnitha WIlliams AP

இனி அடுத்த ஆண்டு தான்... அதிரடியாக அறிவித்த NASA... SUNITA WILLIAMS கதி..?

சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Published on

ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் கேப்சூலில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்த இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தான் பூமிக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்று நாசா சனிக்கிழமை அறிவித்திருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பேரிடியாக வந்து இறங்கியிருக்கிறது நாசாவின் இந்த அறிவிப்பு.

விண்வெளி வீரர்களை திரும்ப அழைக்க போயிங்கின் போட்டியாளரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் வாகனத்தை பயன்படுத்தவிருக்கிறது நாசா. இது போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் மீதான சந்தேகங்களை உறுதிப்படுத்தியிருக்கிறது.

புட்ச் வில்மோரும், சுனிதா வில்லியம்ஸும் எட்டு நாள் சோதனைப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் முதல் 24 மணி நேரத்தில் ஸ்டார்லைனரின் உந்து விசை அமைப்பில் தொடர் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் 28 திருப்பிகளில் ஐந்து செயலிழந்தன, மேலும் திருப்பிகளை அழுத்தமாக்கப் பயன்படும் ஹீலியம் கசிவுகள் பல இடங்களில் ஏற்பட்டன. இதனால் அவர்கள் பூமிக்கு திரும்பும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இரண்டு விண்வெளி வீரர்களும் இப்போது பிப்ரவரி 2025ல் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் வழக்கமான விண்வெளி வீரர் சுழற்சி பணியின் ஒரு பகுதியாக அடுத்த மாதம் ஏவப்பட உள்ளது. க்ரூ டிராகனின் நான்கு விண்வெளி வீரர் இருக்கைகளில் இரண்டு வில்மோர் மற்றும் வில்லியம்ஸுக்காக காலியாக வைக்கப்படும்.

ஸ்டார்லைனர் ISS-இலிருந்து குழு இல்லாமல் பிரிந்து, விண்வெளி வீரர்களுடன் இருந்திருந்தால் எப்படி திரும்பியிருக்குமோ அதே போல பூமிக்குத் திரும்ப முயற்சிக்கும்.

சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com