ஜப்பானில் பச்சிளம் குழந்தைகளுக்கு ‘அழும் சுமோ’ போட்டி நடைபெற்றது.
சுமார் 400 ஆண்டுகளாக பச்சிளங்குழந்தைகள் கலந்துகொள்ளும் வித்தியாசமான ‘அழும் சுமோ’ போட்டி ஜப்பானில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான ‘அழும் சுமோ’ போட்டி நடைபெற்றது. இதில், சுமோ வீரர்கள் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு குலுக்குவார்கள். இதில் முதலில் அழும் குழந்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதில் பங்கெடுத்தால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கையாகும். அழும் குழந்தைகளைப் பார்க்கும் பெற்றோருக்கு மனவேதனை ஏற்பட்டாலும், பிள்ளைகளின் நன்மைக்காக போட்டியில் பங்கேற்கச் செய்கிறார்கள்.