தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்!
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா இங்கிலாந்து உள்துறை அமைச்சராக நியமனம்!
Published on

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் அறிவிக்கப்பட்டார். அவர் பிரதமரானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/hszJ0NFIHfc" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

இந்நிலையில், அந்தப் பதவிக்கு தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். 42 வயதான சுயெல்லா பிராவர்மேன், பிரதமர் பதவிக்கான போட்டியில் இரண்டாம் சுற்று வரை இருந்தவர். இவரது தாயார் உமா பெர்ணான்டஸ் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தமிழ்நாட்டை சேர்ந்த உமா 1960களில் இங்கிலாந்தில் குடியேறினார். பின்னர் உமா இங்கிலாந்தில் குடியேறிய கென்யாவை சேர்ந்த கிரிஸ்டி பெர்னாண்டஸ் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர் தான் சுயெல்லா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com