சூடானில் ராணுவ புரட்சிக்கு எதிரான போராட்டத்தில் இருவர் கொல்லப்பட்டனர். வன்முறை தொடர்வதால் அந்நாட்டு பிரதமர் பதவி விலகியுள்ளார்.
சூடான் நாட்டில் 2019ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து ஜனநாயகரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சூழலில், கடந்த அக்டோபர் மாதம் அரசுக்கு எதிராக ராணுவத் தளபதி Abdel Fattah al-Burhan புரட்சியை தொடங்கினார். பிரதமர் Abdalla ஹம்தக்கை சிறைபிடித்த ராணுவத்தினர், பின்னர் நடந்த ஒப்பந்தப்படி அவர் பதவியில் தொடர்வார் என அறிவித்தனர்.
இதனிடையே ராணுவப்புரட்சிக்கு எதிரான போராட்டம் சூடானில் வெடித்தது. நேற்று நடந்த போராட்டத்தின்போது ராணுவத்தினரும் பொதுமக்களும் மோதிக்கொண்டனர். இதில் போராட்டக்காரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். நாட்டை பேரழவில் இருந்து காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக கூறிய சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.