வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்.. மாணவர்கள் மீது தாக்குதல் - என்ன காரணம்?

உரிமைகளுக்காக போராடும் குணம் எப்போதும் வரவேற்பைப் பெறும். ஆனால், உரிமைப் போராட்டத்தை அதிகாரத்தால் முடக்க நினைத்தால், போராட்டக் களம் போர்க்களமாகி விடும். நம் அண்டை தேசமான வங்கதேசம் தற்போது சந்திக்கும் இப்படி ஒரு பிரச்னையின் பின்னணியைப் பார்க்கலாம்.
வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்
வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்ட்விட்டர்
Published on

செய்தியாளர்: ரவிக்குமார்.

வங்கதேசம். நம் சகோதர நாடு. இந்திய வரைபடத்தில் பார்த்தால், இந்தியாவுடன் சேர்ந்தே இருக்கும் ஒரு மாநிலம் போலவே தெரியும். மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் பெயரே, வங்கப்பிரிவினையின் பாதிப்புதான் என்பது வரலாறு. முஸ்லிம் நாடு என்றே அறிவிக்கப்பட்ட நாடு. இயற்கையின் பெரும் வளங்களையும் வீர தீரம் மிக்க வரலாறையும் தன்னகத்தே கொண்டுள்ள தெற்காசிய நாடு.

பெருமைகளுடன் திகழும் இந்த மக்களாட்சி நாடு, தற்போது பற்றி எரிந்து வருகிறது.
வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்
வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்

ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு வீதியிலும் கொழுந்து விட்டு எரிகிறது கலவர நெருப்பு.. இந்தப் பரபரப்புக்கெல்லாம் காரணம், உரிமைப் போராட்டம். போராட்டத்தில் வெடித்த தாக்குதல். இதைத் தொடர்ந்த வன்முறை. இதன் பின்னணியைப் பார்க்கலாம்...

1971 : ‘இனி கிழக்கு பாகிஸ்தான் அல்ல; வங்கதேசம்’

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, தனி நாடாக இயங்கியது பாகிஸ்தான். மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று சொல்வழக்கில் அறியப்பட்டது. அப்போது, கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் வங்க மொழி பேசும் மக்களே வசித்தனர். ஆனால், இந்தப் பகுதியை பாகிஸ்தான் அரசு புறக்கணித்தது. தேர்தல் முடிவுகளிலும் குளறுபடிகளைச் செய்தது. இதனால் பாகிஸ்தான் அரசுக்கெதிராக தொடங்கிய கிளர்ச்சி, போராக மாறியது.

இந்தப் போராட்டத்தை ஆதரித்தது இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு. விடுதலைப் போருக்காக படைகளை அனுப்பியது.

1971 டிசம்பர் 16 ல் இந்தியா மற்றும் முக்தி - பாஹினி கூட்டுப்படைகளின் முன்பு சரணடைந்தார் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல். இந்தப் போரின் முடிவு, வங்கதேசம் என்ற புதிய தேசம் உருவாக வழிவகுத்தது.

இடஒதுக்கீடு அறிவிப்பும், எதிர்ப்பும்!

இந்தப் போரில் 5 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டது. ஏராளமானோர் காணாமல் போயினர். விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தோரின் தியாகத்தைப் போற்றும் விதமாக, அவர்களின் சந்ததிகளுக்கு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது வங்கதேசம் அரசு. பின்னர் 2018 ல் வெடித்த மாணவர்கள் புரட்சியின் காரணமாக, இந்த இட ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டது.

வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்
மீண்டும் மீண்டும் பிரச்னையில் சிக்கும் பூஜா கேத்கர்?

தற்போதைய பிரச்னை என்ன?

தற்போது வங்கதேசத்தில் அரியணையில் இருக்கும் அவாமி லீக் கட்சி, விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதென முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.

இந்த நிலையில்தான், இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னெழுச்சியாக போராட்டங்களில் குதித்துள்ளனர் மாணவர்கள். இவர்களை, ஆளுங்கட்சியின் மாணவர் அமைப்பான பங்களாதேஷ் சத்ரா லீக் அமைப்பினர், தாக்கி வருகின்றனர். போராட்டத்தை முடக்கும் விதமாக, அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதால், வன்முறைக் களமாகியுள்ளது வங்கதேச வீதிகள்.

வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்
என்னது இந்த ரப்பர் செருப்பு குவைத்தில் 1 லட்சம் ரூபாயா! வாயடைத்து போன இந்தியர்கள்! வைரலாகும் வீடியோ

தலைநகர் டாக்கா மட்டுமல்ல, ராஜ்ஷாஹி, குல்னா, சட்டோக்ரம் உள்ளிட்ட ஒவ்வொரு நகருமே வன்முறைகளால் வதைபட்டு வருகின்றன. இதுவரை மாணாக்கர் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

வங்கதேச அரசு சொல்வதென்ன?

பொதுச்சொத்துக்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினா, “வீட்டையும் குடும்பத்தையும் மறந்து நாட்டுக்காக உயிர்நீத்தவர்களின் பிள்ளைகளை அரசு ஆதரிப்பதும் கௌரவிப்பதும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com