வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுவரும் சூழலில் டொனால்ட் டிரம்ப் இந்த அதிரடி டிவீட்டை செய்துள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு 264 வாக்குகள் கிடைத்துள்ளது, பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளை பெற அவருக்கு இன்னும் 6 வாக்குகளே தேவை என்ற நிலை டிரம்ப் இந்த அதிரடி கருத்தினை தெரிவித்துள்ளார். இதுவரை டொனால்ட் டிரம்ப்க்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. கிட்டதட்ட அவரது தோல்வி உறுதியாகியுள்ளது.
வெற்றிபெற்றுவிட்டேன் என்று பதிவிட்டு நேற்று அதிர்ச்சி கொடுத்திருந்தார் ட்ரம்ப். அந்த ட்விட்டர் பதிவை டெலிட் செய்து அவருக்கே அதிர்ச்சி கொடுத்தது ட்விட்டர். அதிபர் ட்ரம்பின் இத்தகைய அணுகுமுறையால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மேலும் இழுபறி ஏற்படும் நிலை உருவாகும்.