கடந்த நவம்பர் 10ம் தேதி அமெரிக்காவின் கொலராடோ, கன்சாஸ், டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமாவின் வானத்தில் எரியும் பொருள்கள் சில பூமியை நோக்கி விழுந்தது. அதை அதனை அனைவரும் விண்கல் என்று நினைத்தனர். ஆனால் அது விண்கல் இல்லை ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் என்று தெரியவந்தது.
இந்த செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் 2022ல் ஏவியதாகவும் அது காலாவதியானதால், அவை பூமியின் வளிமண்டலத்தை உரசி வெடித்து பூமியில் விழுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த விண்கலம் எரிந்து விழுந்த காட்சியானது வைரலானது.
ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த வானியலாளர் மற்றும் புகழ்பெற்ற விண்கல் கண்காணிப்பாளாரான ஜொனாதன் மெக்டோவலின் கூற்றுப்படி, ”இது விண்கல் அல்ல.. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளாக இருக்கலாம் ”என்று கூறுகிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் உலகளாவிய இணைய சேவையை உருவாக்குவதற்காக தொடர்ந்து இத்தகைய செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதில், காலாவதியான செயற்கைகோள்கள் விண்வெளியில் குப்பைகளாக புவிவட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகின்றன. அவற்றில் ஒன்று சிதைந்து பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகள் இத்தகைய குப்பைகளை அப்புறப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி காலாவதியான செயற்கைக்கோள்களை நமது புவிவட்ட பாதையிலிருந்து விலக்கியும் அல்லது வளிவண்டலத்தை உராயச் செய்யும் பொழுது அவை எரிந்து பூமியில் சாம்பலாக விழும்படியும் செய்யலாம் என்கின்றனர்.
இவ்வாறு பூமியில் எரிந்து விழும் காலவதியான செயற்கைக்கோள் விண்வெளியில் உராய்வை ஏற்படுத்தி உடைந்து எரியும் பொழுது அவை அலுமினியம் ஆக்சைடு போன்ற தாதுக்களை புகையாக வெளியிடுகிறது. இந்த புகையானது பூமியின் மேல் இருக்கும் வளிமண்டலத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். இதனால் ஓசோன் சிதைக்கு காரணமாகலாம் இதனால் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் வளிமண்டலத்தின் திறனை சீர்குலைக்கலாம்,. மேலும் வானவியலுக்கு இடையூறாக இருப்பதாகவும் பல நிபுணர்களும் தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர்.
இந்நிலையில் புளோரிடா கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கொரியாசாட்-6ஏ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது .