இலங்கை| அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.. நாளைக்குள் முடிவு!

இலங்கையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவு பெற்றுள்ளது.
இலங்கை
இலங்கைஎக்ஸ் தளம்
Published on

இந்தியாவின் மிக அண்டை நாடான இலங்கையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவு பெற்றுள்ளது.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் அதிபர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர்கூட பெண் வேட்பாளர் இல்லை. அந்த வகையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமரா திசநாயக்க மற்றும் தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் உட்பட மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 13,421 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், இந்தத் தேர்தலில் 1,71,40,350 வாக்காளர்கள் வாக்களிக்க தேர்வு பெற்றிருந்தனர். இதில், 1.2 மில்லியன் புதிய வாக்காளர்கள். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 4 மணியுடன் நிறைவுபெற்றது. ஒட்டுமொத்தமாக எவ்வளவு வாக்குகள் பதிவாகின என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில், கிட்டத்தட்ட 70 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளை.. விசாரணையில் கேரள நபர் மற்றும் இத்தாலி பெண்!

இலங்கை
உலக நாடுகளே உற்று நோக்கும் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற அடுத்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 அல்லது 3 மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று கொழும்பு நகர தேர்தல் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.

Reuters

முதற்கட்டமாக, இன்று நள்ளிரவுக்குள் தபால் ஓட்டுகளின் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து நாளைக்குள் அனைத்து முடிவுகளும் முழுவதுமாக தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ”இங்க ஆள் இல்ல பாருங்க..”|வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த ரிஷப்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இலங்கை
Sri Lanka Election| இலங்கை அதிபர் தேர்தல்.. வெல்லப் போவது யார்? இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com