இலங்கையில் பெட்ரோல் நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தததை அடுத்து, ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு அங்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், முல்லைத்தீவு அருகே விசுவமடு பகுதியில் இன்று எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுனர். இந்த சம்பவத்தின் போது, எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர்கள் சிலர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.