இலங்கையில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கொடூரமாக நடந்து கொண்டதாக அதிரடிப் படையினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை அதிரடிப் படையினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் மற்றும் அதிரடி படையினர் மிக மோசமான முறையில், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன் மாணவர்களுக்காக மக்கள் கொண்டு வந்த உணவுகள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மீதும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதற்காக காவல்துறையினர் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையே, நாடாளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம், தனது ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.