இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைய 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அதை கலைப்பதாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்து, அதற்கான கோப்பில் அவர் கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்கு மேல் ஆனால், அதை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஆணையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டிருப்பதாக தெரிகிறது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 12 ஆம் தேதி முதல் 19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சிறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.