கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..! ஓடி ஓடி காப்பாற்றிய மனிதர்கள்..!

கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..! ஓடி ஓடி காப்பாற்றிய மனிதர்கள்..!
கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..! ஓடி ஓடி காப்பாற்றிய மனிதர்கள்..!
Published on

இலங்கை கடற்கரையில் ஒதுங்கிய 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை மக்களும், கடற்படையினரும் மீட்டு கடலுக்குள் விட்டனர்.

இலங்கை கொழும்புவில் ஒரு தீவின் தென்மேற்கு கடற்கரையில் அதிக அளவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இது குறித்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் கடற்படையினரும், அப்பகுதி மீனவர்களும் களத்தில் இறங்கினர். கரை ஒதுங்கிய திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் இழுத்து விட்டுள்ளனர்.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேசிய கடற்படை அதிகாரி, சுமார் 100 முதல் 120 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. நாங்கள் அதனை மீண்டும் கடலுக்குள் விட்டோம். ஆனாலும் 4 திமிங்கலங்கள் இறந்துவிட்டன எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள மீனவர் ஒருவர், நான் மீன் பிடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை பார்த்தேன். எங்களால் முடிந்தவரை எல்லாவற்றையும் கடலுக்குள் மீண்டும் இழுத்துச்சென்று விட்டோம். இது ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை. இதுபோல் முன்பு நடந்தது இல்லை. இப்படி ஒரு சம்பவத்தை முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் போன்றவற்றால் கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்துகளைச் சந்தித்துவருகின்றன. அண்மையில் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் உயிருக்குப் போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. சுற்றுச்சூழல் மாசுகளால் வனவுயிர் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் இலங்கை சம்பவமும் அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது

புகைப்படங்கள்: Reuters

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com