இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கே முதலிடம் தரப்படும் என்று அந்நாட்டின் புதிய வெளியுறவுச் செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக மீண்டும் மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். வெளியுறவுத்துறையின் புதிய செயலாளராக முன்னாள் ராணுவத் தளபதி ஜெயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்குத் தான் முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கையை புதிய அரசு கடைப்பிடிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிடமிருந்து ஏராளமான உதவிகளைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட கொலம்பகே, இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் கூறினார். மேலும் இலங்கையின் அம்பந்தட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு முந்தைய அரசு கொடுத்தது தவறான நடவடிக்கை என்றும் ஜெயநாத் கொலம்பகே குறிப்பிட்டார்.