இந்திய நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது என அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச இவ்வார இறுதியில் இந்தியாவுக்கு வருகிறார். இதனையொட்டி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோத்தபய ராஜபக்ச, இந்தியா , சீனா ஆகிய இருநாடுகளுடனும் இணைந்து செயல்படவே விரும்புகிறோம் என கூறியுள்ளார். சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ ஆதரவான நிலையை கடைபிடிக்காமல் இலங்கை நடுநிலை நாடாக திகழும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எத்தகைய நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது என கூறியுள்ள கோத்தபய ராஜபக்ச, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைவிட்டது முந்தைய ஆட்சியாளர்கள் செய்த மிகப்பெரிய தவறு. அந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.