இலங்கை அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை வாங்காத நிலையில் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடைசியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேசிய மக்கள் சக்தி கட்சியீன் அநுரா குமாரா திஸநாயக்கா 39.52 விழுக்காடு வாக்குகளை பெற்றிருந்தார்.
34.28 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் இருந்தார். இலங்கை தேர்தல் விதிகளின்படி ஒருவர் அதிபராக தேர்வாக 50 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை பெறவேண்டும், முன்னணியில் உள்ள இருவரும் 50 விழுக்காடு வாக்குகளை பெறாததால் வாக்காளர்களின் இரண்டாவது விருப்பத் தேர்வுகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மொத்த வாக்கு எண்ணிக்கையில் முதல் இரண்டு இடத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த இரண்டாவது சுற்றில் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.
மாற்றுத் தேர்வு வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் ரத்னாயக்க கூறினார். மொத்த வாக்கு எண்ணிக்கையில் திசநாயக முன்னணியில் (43% வாக்குகளுடன்) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாக்களார்கள் தலா மூன்று பேருக்கு தங்கள் விருப்பத்தின்படி வரிசைப்படுத்தி வாக்களிக்கிறார்கள்.