”அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களின் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படும்” - இலங்கை அதிபர் உறுதி!

இலங்கை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” என அதிபர் தெரிவித்துள்ளார்.
அநுர குமரா திசநாயகே
அநுர குமரா திசநாயகேx page
Published on

அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 55.89 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் அநுர குமரா திசநாயக வெற்றிபெற்றார். இதனைத்தொடர்ந்து இலங்கையின் அதிபராக அநுர குமரா திசநாயகே பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ”இலங்கை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்” என அதிபர் தெரிவித்துள்ளார்.

இதுதொடரபாக யாழ்ப்பானம் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “போரினால் பாதிக்கப்பட்ட ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருகின்றனர். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.

அதிக தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிக்குச் சொந்தமான நீர்வளங்களை தமிழக மீனவர்கள் அழிக்கின்றனர். எங்கள் அரசாங்கம், நீர்வளங்களை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும். அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மேடையில் பேசத் தயங்கியவர்| வெள்ளைமாளிகையில் ட்ரம்ப் கொடுத்த மிகப்பெரிய பதவி.. யார் இந்த சூசி வைல்ஸ்?

அநுர குமரா திசநாயகே
இலங்கை அதிபரான அநுர குமரா திசநாயக மீது தமிழர்களின் பார்வை எப்படி உள்ளது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com