எதிர்க்கட்சியினர் மீது மிளகாய்ப் பொடி தூவிய ராஜபக்ச எம்.பிக்கள்

எதிர்க்கட்சியினர் மீது மிளகாய்ப் பொடி தூவிய ராஜபக்ச எம்.பிக்கள்
எதிர்க்கட்சியினர் மீது மிளகாய்ப் பொடி தூவிய ராஜபக்ச எம்.பிக்கள்
Published on

இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பின் போது, ராஜபக்ச தரப்பு எம்.பிக்கள் மிளகாய்ப் பொடியை தூவி தாக்கியது தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக தேர்வு செய்தார். இதனையடுத்து, ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தவுடன் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேன அறிவித்தார். ஆனால், சிறிசேனவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. 

பின்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் நவம்பர் 14ம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கெடுப்பில் ராஜபக்ச அரசு தோல்வி அடைந்ததாக சபநாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இதனை, ஏற்க சிறிசேன மறுத்துவிட்டார். தான் நியமித்த பிரதமரை நீக்க முடியாது என்று அவர் கூறினார்.

இதனையடுத்து, நேற்று நடந்த இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ச பேசினார். அப்போது, ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பினருக்கு இடையே பயங்க மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடிதடிக்கு நடுவே கத்தியுடன் நாடாளுமன்றத்தில் வலம் வந்த ஒரு எம்.பி. கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்றும் கூச்சல் குழப்பம் நிலவியது. ராஜபக்ச ஆதரவு எம்.பிக்கள் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது மிளகாய்ப் பொடி தூவினர். அதேபோல், தடுக்க வந்த காவல்துறையினர் மீது தண்ணீரில் கரைத்த மிளகாய்ப் பொடி கலைவையை தெளித்தனர்.

இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களும், போலீசாரும் சிரமப்பட்டனர். மேற்கொண்டு சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு எதிராக ராஜபக்ச ஆதரவு எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com